செயல்படும் விதம்
உங்களுக்கான VPNனை இயக்கி உங்கள் இணைய டிராஃபிக்கைக் கட்டுப்படுத்துங்கள்
பயனா்கள் தங்களுக்கான VPNனைத் தாங்களே உருவாக்குவதை எளிதாக்குவதன் மூலம் வழக்கமான VPN மாதிரியில் Outline மேம்படுகிறது.
வழக்கமான VPNகள்
வழக்கமான VPNகளைக் கண்டறிவது எளிது என்பதால் அடிக்கடி அவற்றைத் தடுப்பது எளிதானது.
நீங்கள் VPNனைப் பயன்படுத்தும் போது, உங்கள் டிராஃபிக் அடையாளம் நீக்கப்பட்டதாக இருக்கும். ஆனால் பிரபலமான VPNகளால் பயன்படுத்தப்படும் சில பாதுகாப்பு நெறிமுறைகள் தனித்துவமான கிரிப்டோகிராஃபிக் கையொப்பங்களைப் பயன்படுத்துகின்றன, அவற்றை எளிதில் அடையாளம் காணவும் தடுக்கவும் முடியும்.
உங்கள் சாதனத்தை வழக்கமான VPN உடன் இணைக்கும்போது, உங்கள் டிராஃபிக்கைக் கண்டறிவது எளிது. ஏனெனில் ஒரே மாதிரியான டிராஃபிக்கின் அளவு சேவையகத்தைக் கண்டுபிடித்துத் தடுப்பதை எளிதாக்குகிறது.
Outline
மற்ற VPNகள் தடுக்கப்படும் போது Outline வேலை செய்கிறது மற்றும் நெட்வொர்க் அடிப்படையிலான தடுப்பு அல்லது IP தடுப்பு போன்ற மேம்பட்ட தணிக்கை முறைகளுக்கு எதிராக உள்ளது.
கண்டறியக் கடினமான நெறிமுறையைப் பயன்படுத்தி கட்டமைக்கப்பட்டுள்ளதால் Outline மிகவும் வலுவானது, அத்துடன் இதைத் தடுப்பதும் கடினம்.
நம்பகமானவர்களுடன் உங்கள் சேவையகத்திற்கான அணுகலைத் தனிப்பட்ட முறையில் பகிரவும். உங்கள் சேவையகத்துடன் குறைவானவர்களே இணைக்கப்பட்டால் அதைக் கண்டறிவது கடினம் மற்றும் தனிப்பட்டதாக இருப்பது எளிது.
உங்கள் தனியுரிமையை மனதில் கொண்டு Outline உருவாக்கப்பட்டது.
இது உங்கள் டிராஃபிக்கை ஒருபோதும் பதிவுசெய்யாது அல்லது உங்கள் இணைய உபயோகத்தைக் கண்காணிக்காது.
Outline Managerரைப் பெறுக Outline Clientடைப் பெறுகதனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் Outlineனை எப்படிப் பயன்படுத்துகின்றன என்பதை அறிக
நீங்கள் தேடுவதைக் கண்டறிய முடியவில்லையா?
எங்கள் உதவி மையப் பக்கத்தைப் பாருங்கள்.
Outline பற்றிய பொதுவான கேள்விகள்