Outline SDKவை அறிமுகப்படுத்துகிறோம். நெட்வொர்க் குறுக்கீட்டில் இருந்து திறம்பட மீண்டு வருவதற்கான மேம்பட்ட உத்திகளை இது வழங்குகிறது. மேலும் அறிக

தொடங்குக

இணைந்து வேலை செய்யும் இரண்டு தயாரிப்புகள்

உங்களுக்கும் உங்கள் சமூகத்துக்கும் தடையில்லா இணைய அணுகலை வழங்குவதற்கு ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய இரண்டு தயாரிப்புகளை Outline கொண்டுள்ளது.

Step 1

Outline Managerருடன் தொடங்குங்கள்

Outline Manager டெஸ்க்டாப் ஆப்ஸில் இருந்து உங்கள் சேவையகத்தை அமைக்கலாம்

Outline Manager

உங்கள் சேவையகத்தை அமைக்க Manager டெஸ்க்டாப் ஆப்ஸைப் பதிவிறக்கவும். உங்கள் சேவையகத்தைப் பற்றிய அனைத்தையும் ஒரே இடத்தில் நிர்வகிக்க உங்களை அனுமதிக்கும் வகையில் Outlineனை வடிவமைத்துள்ளோம். நம்பகமான கிளவுடு வழங்குநர்களின் பட்டியலிலிருந்து தேர்வு செய்யலாம் அல்லது உங்களுக்கான Linux உள்கட்டமைப்பைப் பயன்படுத்தலாம். பல கிளவுடு வழங்குநர்கள் ஒரு மாதத்திற்கு $5USD அல்லது அதற்கும் குறைவான திட்டங்களை வழங்குகிறார்கள்.

நீங்கள் Managerரைப் பதிவிறக்கியவுடன், உங்கள் சேவையகத்தை இயக்க விரும்பும் கிளவுடு வழங்குநரைத் தேர்ந்தெடுக்கும்படி உங்களிடம் கேட்கப்படும். Digital Ocean, AWS, Google Cloud போன்ற நம்பகமான சில வழங்குநர்களில் இருந்து தேர்வுசெய்யவும். உங்கள் கிளவுடு வழங்குநரைத் தேர்ந்தெடுத்ததும், அவர்களின் குறிப்பிட்ட ஆன்போர்டிங் செயல்முறையின் மூலம் அவர்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்கள். ஆனால் உங்கள் Outline Managerரில் இருந்து உங்கள் சேவையகத்தை நீங்கள் நிர்வகிக்க முடியும்.

உங்கள் சேவையகம் எங்கு இருக்க வேண்டும் என்பதைத் தேர்வுசெய்ய Outline உங்களை அனுமதிக்கிறது. சிங்கப்பூர், ஜெர்மனி, அமெரிக்கா போன்ற பல நாடுகளின் வழியாக உங்கள் டிராஃபிக்கை நீங்கள் ரூட் செய்யலாம்.

Windows Windows Windows
Linux Linux Linux
MacOS MacOS MacOS
Outline Managerரை பதிவிறக்குக

Step 2

அணுகல் குறியீடுகளை உருவாக்குங்கள்

உங்கள் சாதனங்களை இணைக்க அணுகல் குறியீடுகளை உருவாக்கி உங்கள் நெட்வொர்க்குடன் அணுகலைப் பகிரலாம்

Outline Manager

உங்கள் சேவையகத்தை அமைத்தபிறகு, Manager டெஸ்க்டாப் ஆப்ஸில் இருந்து நேரடியாகத் தனிப்பட்ட அணுகல் குறியீடுகளை உருவாக்கலாம். உங்களுக்கு விருப்பமான தகவல்தொடர்பு பிளாட்ஃபார்ம் மூலம் உங்கள் சேவையகத்துடன் இணைப்பதற்கான அழைப்புகளை Manager மூலம் நீங்கள் அனுப்பலாம். உங்கள் சாதனங்களை Outline Managerருடன் எப்படி இணைப்பது, உங்கள் சேவையகத்தைப் பயன்படுத்தி எப்படி அவற்றைப் பாதுகாப்பது போன்றவற்றிற்கு அணுகல் குறியீடுகள் உள்ளன. ஒவ்வொரு அணுகல் குறியீடுயும் தனித்துவமானது. மேலும் சேவையகத்திலிருந்து நேரடியாக நிர்வகிக்கவோ நீக்கவோ செய்யலாம். ஒவ்வொரு குறியீடுயும் இணைய வேகத்தை எந்தளவுக்குப் பயன்படுத்தலாம் என்பதை டேட்டா வரம்புகள் மூலம் கட்டுப்படுத்தலாம்.

உங்கள் சேவையகத்துடன் இணைப்பது உங்கள் அழைப்பை ஏற்றுக்கொள்வதைப் போல எளிதானது. நீங்கள் இணைந்ததும், ஆப்ஸிலிருந்து உங்கள் இணைப்பை எளிதாக இயக்கலாம் முடக்கலாம்.

பகிர்வு அணுகலைப் பற்றி மேலும் அறிக

Step 3

டெஸ்க்டாப் மற்றும் மொபைலுக்கான Outline Client ஆப்ஸைப் பெறுங்கள்

உங்கள் தனிப்பட்ட அணுகல் குறியீடைப் பயன்படுத்தி இணைக்கலாம்

App store அல்லது Google Play Storeரில் இருந்து Outline Client ஆப்ஸைப் பதிவிறக்கி, உங்களுக்கான தனிப்பட்ட அணுகல் குறியீட்டைப் பயன்படுத்தி இணைக்கலாம். டெஸ்க்டாப் மற்றும் மொபைல் சாதனங்களுக்கு Client ஆப்ஸ் கிடைக்கிறது. எனவே நீங்கள் எங்கிருந்தாலும் எந்தச் சாதனங்களில் இருந்தும் நீங்கள் பொது இணையத்தை அணுகலாம், தனிப்பட்ட முறையில் தொடர்பு கொள்ளலாம்.

உங்கள் சாதனங்களை இணைத்தவுடன், உங்கள் சேவையகத்திற்கான அணுகலை உங்கள் நண்பர்கள் அல்லது சக பணியாளர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். தனிப்பட்ட அணுகல் குறியீடுகளை உருவாக்கி, இணையத்திற்கான ஃபில்டர் செய்யப்படாத அணுகல் தேவைப்படும் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள எவருக்கும் அவற்றை அனுப்பலாம். டேட்டா வரம்புகள் மூலம் உங்கள் சேவையகத்திற்கான அணுகலை நிர்வகிக்கலாம். இதனால் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள ஒருவர் இணைய வேகத்தை அதிகமாகப் பயன்படுத்தினால், அதைக் கட்டுப்படுத்துவதற்கான விருப்பம் உங்களுக்கு உள்ளது.

Android Android Android
Windows Windows Windows
Chrome Chrome Chrome
iOS iOS iOS
Mac Mac MacOS
Linux Linux Linux
OUTLINE CLIENTடைப் பெறுக

மாற்று இணைப்பைப் பயன்படுத்துங்கள். கிளையண்ட் ஆப்ஸை இயக்குவதற்கான தேவைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.

நீங்கள் தேடுவதைக் கண்டறிய முடியவில்லையா?

எங்கள் உதவி மையப் பக்கத்தைப் பாருங்கள்.

Outline பற்றிய பொதுவான கேள்விகள்