பொதுவான கேள்விகள்
பொதுவான கேள்விகள்
நீங்கள் தேடுவதைக் கண்டறிய முடியவில்லையா?
மேலும் தொழில்நுட்ப உதவிக்கு எங்கள் உதவி மையத்தைப் பாருங்கள்.
இல்லை. Outline ஒரு VPN அல்ல. யாா் வேண்டுமானாலும் தங்களுக்கான தனிப்பட்ட VPN சேவையகத்தை அமைத்து நிர்வகிக்க இது அனுமதிக்கிறது.
- ஹேண்ட்ஷேக் இல்லாத, அடையாளம் காண்பதற்கு கடினமான நெறிமுறையை Outline பயன்படுத்துகிறது. இது அடையாளம் காண்பதற்கும் தடுப்பதற்கும் எளிதான நிலையான VPN நெறிமுறைகளைப் போல் இல்லை.
- தனிப்பட்ட அணுகல் பகிர்வு. பொது VPNகளைப் போல இல்லை. இவற்றில் தணிக்கையாளர் சேவையகங்களை எளிதாக அணுகலாம், தடுக்க வேண்டிய சேவையகங்களைப் பட்டியலிடலாம்.
- ஒரு சேவையகம் தடுக்கப்பட்டால் Outline மூலம் அதை மீண்டும் உருவாக்குவது எளிது.
அணுகல் விசைகளை Outline Managerரிடம் இருந்து மட்டுமே உருவாக்க முடியும். Outline Managerரைப் பயன்படுத்தி ஒரு சேவையகத்தை அமைத்துள்ள உங்களுக்குத் தெரிந்தவரை அணுகவும் அல்லது உங்களுக்கான சேவையகத்தை அமைத்து அணுகல் விசையை நீங்களே அனுப்பவும்.
சாா்பற்ற இரண்டு பாதுகாப்பு நிறுவனங்களால் Outline தணிக்கை செய்யப்பட்டுள்ளது. அவற்றின் அறிக்கைகளை இங்கே படிக்கலாம்: Radically Open Security (மார்ச் 2018, டிசம்பர் 2022), Cure53 (டிசம்பர் 2018, ஜனவரி 2024).
தனிப்பட்ட தகவல்களை வழங்குவதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கும் வரை Outline அவற்றைச் சேகரிக்காது. நீங்கள் பார்வையிடும் இணையதளங்கள், யாருடன் தொடர்பு கொள்கிறீர்கள், என்ன பேசுகிறீா்கள் போன்ற தகவல்களையும் Outline சேகரிக்காது. நாங்கள் சேகரிக்கும் தரவைப் பற்றி மேலும் படிக்க, இந்த உதவி மையக் கட்டுரையைப் பாருங்கள்.
Outline Manager மூலம் நீங்கள் கிளவுடு வழங்குநருடன் கணக்கை உருவாக்கினாலோ உள்நுழைந்தாலோ, உங்கள் கிளவுடு வழங்குநருக்கு நீங்கள் வழங்கும் எந்தத் தகவலையும் (உங்கள் மின்னஞ்சல் முகவரி, பெயர், பில்லிங் தகவல், பேமெண்ட் விவரங்கள் போன்றவை) நாங்கள் பெற மாட்டோம்.
உங்கள் குறிப்பிட்ட தேவைகள் மற்றும் பட்ஜெட்டின் அடிப்படையில் உங்கள் கிளவுடு வழங்குநரைத் தேர்வு செய்யலாம். Google, Amazon Web Services ஆகிய இரண்டும் நம்பகமான பெயர்கள். Digital Ocean மாதத்திற்கு குறைந்த விலைத் திட்டங்கள் சிலவற்றை வழங்குகிறது, மேலும் பல பயனர்கள் இதை அமைப்பது மிகவும் எளிதானது என்று தெரிவிக்கின்றனர்.
அணுகல் விசைகளை Managerரிடம் இருந்து நேரடியாகப் பகிரலாம். பகிர்வதற்கான அணுகல் விசை CTAவைக் கிளிக் செய்தால் முன் கூட்டியே நிரப்பப்பட்ட மெசேஜுடன் அழைப்பு அனுப்பப்படும். அதில் விசையை எப்படி ஏற்றுக்கொள்வது, எப்படி Client ஆப்ஸைப் பதிவிறக்குவது, உங்கள் Outline சேவையகத்துடன் எப்படி இணைப்பது போன்றவை குறித்த பெறுநருக்கான வழிமுறைகள் இருக்கும். உங்கள் பெறுநருக்கு அணுகல் விசை மற்றும் இணைப்பு வழிமுறைகளை அனுப்ப, உங்கள் பெறுநரின் மின்னஞ்சல் முகவரியோ மொபைல் எண்ணையோ நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.
பல இலவச VPNகளைப் பயன்படுத்தினால், உங்கள் தரவை யார் அணுகுவது என்பது உங்களுக்குத் தெரியாது. பல இலவச VPNகள் உங்கள் தரவைப் பகிரவோ விற்கவோ உங்கள் ஆன்லைன் செயல்பாட்டைக் கண்காணிக்கவோ செய்யலாம். பல பிரபலமான இலவச VPNகள் அரசாங்கங்கள் அல்லது பிற கண்காணிப்பாளர்களுக்கு பேக்டோர் அணுகலை அனுமதிக்கின்றன என்று சில பாதுகாப்பு வல்லுநர்கள் கூறுகின்றனர். தடுப்பது, கண்டறியப்படுவது போன்ற பாதிப்புகள் பெரும்பாலான இலவச VPNகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது.
Outline என்பது கட்டணமின்றிப் பயன்படுத்தக்கூடிய ஓப்பன் சோர்ஸ் ஆகும். அதேவேளை எங்கள் பிராண்டு Jigsawக்குச் சொந்தமானது. அதைத் தவறாகப் பயன்படுத்தக் கூடாது. தவறாக இருப்பதற்குச் சாத்தியமுள்ள உரிமைகோரல்கள் தவிர்க்கப்பட்டன அல்லது Outline/Jigsawவைத் தவறாகப் பயன்படுத்தவில்லை என்பதையும் அங்கீகரிக்கப்பட்ட பிராண்டிங் உறுப்புகளைச் சரியாகப் பயன்படுத்துகிறீர்கள் என்பதையும் உறுதிப்படுத்திக்கொள்ள இந்தப் பயனர் வழிகாட்டியைப் படித்துப் பார்த்துப் பின்பற்றவும்.
உங்களுக்குத் தேவையானதைக் கண்டுபிடிக்க முடியவில்லையா?
மேலும் உதவிக்கு குழுவை அணுகவும்
எங்களைத் தொடர்புகொள்க