Outline SDKவை அறிமுகப்படுத்துகிறோம். நெட்வொர்க் குறுக்கீட்டில் இருந்து திறம்பட மீண்டு வருவதற்கான மேம்பட்ட உத்திகளை இது வழங்குகிறது. மேலும் அறிக

இலவச மற்றும் பொது இணையத்திற்கான அணுகல்

Outline மூலம் VPN சேவையகத்தை உருவாக்குவது எளிது. இதன் மூலம் இலவச மற்றும் பொது இணையத்திற்கான அணுகலை அனைவரும் பெறலாம்.

Outlineனைப் பெறுக

கடந்த பத்தாண்டுகளாக இணையத் தணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

யாா் வேண்டுமானாலும் தங்களுக்கான VPNனை இயக்கி இலவச மற்றும் பொது இணையத்தைக் கூடுதல் பாதுகாப்போடு அணுகுவதற்கு Outline உதவுகிறது. Outline மூலம் உங்களுக்கான VPN சேவையகத்தை இயக்குவதால் இணையத்தை அணுகுவதைப் பாதுகாப்பாக மாற்றுகிறது. அத்துடன் தடுப்பதற்குக் கடினமாக இருக்கும் இணைப்பை நிறுவுகிறது.

VPNனை ஏன் பயன்படுத்த வேண்டும்?

உங்கள் தகவல்தொடர்புகளைத் தனிப்பட்டதாக வைத்திருக்க VPNகள் பயனுள்ளதாக இருக்கும். அத்துடன் பொது இணையத்திற்கான அணுகலைத் தக்கவைக்க உங்களை அனுமதிக்கின்றன. ஆனால் பெரும்பாலான VPN வழங்குநர்களைப் பயன்படுத்தும்போது, அந்த VPNனை யார் கட்டுப்படுத்துகிறார்கள் மற்றும் உங்கள் தரவை யார் அணுகுகிறார்கள் என்பது உங்களுக்கு எப்போதும் தெரியாது.

உங்களுக்கான VPN சேவையகத்தை உருவாக்குவது ஒரு சிக்கலான செயலாக இருந்தது-—இப்போது வரை.

ஏன் Outline?

Outline மூலம் யாா் வேண்டுமானாலும் தங்களுக்கான VPNனை உருவாக்கலாம், இயக்கலாம், அதற்கான அணுகலைப் பகிரலாம். தடுக்கப்படுவதை எதிர்க்கும் வகையில் Outline வடிவமைக்கப்பட்டுள்ளது. உங்கள் சேவையகம் அமைக்கப்படும் இடம் உட்பட, உங்கள் சேவையகத்தின் அமைவைக் கட்டுப்படுத்த இது உங்களை அனுமதிக்கிறது. Outline வெளிப்படையான தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறது. இது முற்றிலும் ஓப்பன் சோர்ஸ் ஆகும். மேலும் அதன் தொழில்நுட்பம் அதிநவீனமானதாகவும் பாதுகாப்பானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய இரண்டு பாதுகாப்பு நிறுவனங்களால் தணிக்கை செய்யப்பட்டுள்ளது.

தடுப்பு முறைகளுக்கு எதிர்ப்பு

DNS, உள்ளடக்கம், IP தடுப்பு உள்ளிட்ட மேம்பட்ட பல தடுப்பு முறைகள் சிலவற்றை Outline தடுக்கிறது. பிற பிரபலமான VPNகள் தடுக்கப்பட்டாலோ இணைக்கத் தவறினாலோ Outline செயல்படுவதாகப் பயனர்கள் தெரிவிக்கின்றனர்.

வரம்பு

Outline managerரிடம் இருந்து உங்கள் Outline சேவையகத்திற்கான அணுகலை எளிதாகப் பகிரலாம். Manager டெஸ்க்டாப் ஆப்ஸிலிருந்து தனிப்பட்ட அணுகல் குறியீடுகளை உருவாக்கி, மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் வழியாக உங்கள் நம்பகமான நெட்வொர்க்குடன் பகிரலாம். Outline மூலம், நூற்றுக்கணக்கான பயனர்களுக்கு உங்கள் சேவையகத்திற்கான அணுகலை வழங்கி உதவலாம் அல்லது உங்கள் நெருங்கிய தொடர்புகளுடன் அணுகலைப் பகிரலாம்.

கட்டுப்பாடு

உங்கள் சேவையகத்தின் கட்டுப்பாட்டை உங்களிடம் வழங்குவதன் மூலம் நீங்கள் இணையத்தை எப்படி அணுகுகிறீர்கள் என்பதற்கான கட்டுப்பாட்டை Outline உங்களிடம் வழங்குகிறது. உங்கள் சேவையகத்தை எங்கே அமைக்கலாம், யார் அதை அணுகலாம் போன்றவற்றையும் நீங்கள் தீர்மானிக்கலாம். Client ஆப்ஸ் மூலம் உங்கள் சேவையகத்தை அணுகும் ஒவ்வொரு பயனருக்கும் டேட்டா வரம்புகளை Outline Manager மூலம் நீங்கள் அமைக்கலாம்.

இணைந்து செயல்படும் இரண்டு தயாரிப்புகள்

Outlineனில் இரண்டு தயாரிப்புகள் உள்ளன. அவை இரண்டும் Outline SDK மூலம் எங்கள் அதிநவீன, முக்கியத் தொழில்நுட்பத்தால் இயங்குகின்றன.

Outline Manager உங்களுக்கான VPN சேவையகத்தை உருவாக்குவதை எளிதாக்குகிறது. உங்களுக்கான சேவையகத்தை அமைத்து, டெஸ்க்டாப் ஆப்ஸில் இருந்து நேரடியாக அணுகல் குறியீடுகளைப் பகிரலாம். Outline Manager அனைத்து டெஸ்க்டாப் சிஸ்டங்களிலும் கிடைக்கிறது.

Outline Managerரைப் பெறுக

Outline Client என்பது சுலபமான, பயன்படுத்த எளிதான ஆப்ஸாகும். இதன் மூலம் உங்கள் நெட்வொர்க்கில் உள்ள எவருடனும் உங்கள் VPNக்கான அணுகலைப் பகிரலாம். உங்கள் எல்லா சாதனங்களையும் பாதுகாக்க மொபைல் அல்லது டெஸ்க்டாப்பில் ஆப்ஸைப் பதிவிறக்கவும். Outline Managerரால் உருவாக்கப்பட்ட உங்கள் தனிப்பட்ட அணுகல் குறியீடைப் பயன்படுத்தி உங்கள் சேவையகத்துடன் இணைக்கவும்.

outline clientடைப் பெறுக

நெட்வொர்க் குறுக்கீட்டில் இருந்து உங்கள் ஆப்ஸையும் VPN கருவிகளையும் பாதுகாப்பதற்கு Outlineனின் மேம்பட்ட நெட்வொர்க்கிங் உத்திகளைப் பயன்படுத்தும் கிராஸ்-பிளாட்ஃபார்ம் லைப்ரரியையும் கருவிகளின் தொகுப்பையும் பாருங்கள்.

தொடங்குக

நீங்கள் நம்பும் வகையிலான இணையம்

Outline ஒரு ஓப்பன் சோர்ஸ் ஆகும் Radically Open Security (2018, 2022) மற்றும் Cure53 (2018, 2024) மூலம் தணிக்கை செய்யப்பட்டது.

getoutline.me இணையதளமும் அதனுடன் தொடர்புடைய "@OutlineVpnOfficial" என்ற Telegram சேனலும் Outline குழுவிற்குத் தொடர்புடையவை அல்ல. இந்தச் சேவைகளிடமிருந்து பெறப்படும் அணுகல் குறியீடுகளில் ஏற்படும் சிக்கல்களைச் சந்திக்கும் பயனர்களுக்கு எங்களால் உதவ முடியாது.